கடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்டனர். படகு சென்று கொண்டு இருக்கும் போது திடீர் என தீப்பிடித்து செனகலின் வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் மூழ்கியது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

செனகல், ஸ்பானிஷ் கடற்படைகள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் 59 பேரை மீட்டனர் மற்றும் 20 பேரின் உடல்கள் மீடகப்பட்டன.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக 11,000 ஆக அதிகரித்துள்ளது.

663 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் பதினான்கு படகுகள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த பயணத்தை மேற்கொள்ள முயற்சித்தன – அவற்றில் பல படகுகள் விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி