Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

“இலங்கைத் தமிழரை சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது”; இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

T

The Leader Desk

பிப்ரவரி 16, 2026 • 6:46 AM

“இலங்கைத் தமிழரை சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது”; இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
  • தமிழகத்தில் தற்போது 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர்.
  • இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள்.
  • அதிலும் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
எழுத்து அளவு:

அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: கடந்த 1983ஆம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி, மருத்துவ வசதிகளை தமிழகம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

தமிழகத்தில் தற்போது 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள். அதிலும் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

‘ஆக்கப்பூர்வ அணுகுமுறை’ - இந்த நிலையில், சமீபத்திய மத்திய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாககுடிவரவு மற்றும் வெளிநாட்டினர் ஆணை 2025 ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. அந்த ஆணைப்படி, ‘2015 ஜன.9ம் தேதி வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத்தமிழர்களை சட்ட விரோதமாககுடியேறியவர்களாக கருதக்கூடாது’ என்று முறையான விளக்கம் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும்.

எனவே, இலங்கைத் தமிழர்களிடன் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை மத்திய அரசு ரத்து செய்து, தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு தற்போதைய நடைமுறையில் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும். குடியுரிமை, நீண்டகால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம்வழங்க வேண்டும்.

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையை சட்டவிரோதம் என வரையறுப்பது மனிதாபிமான சூழலை பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக, 2015 ஜன.9 வரைஇந்தியாவில் வசித்து வரும்இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதக் கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும். இந்த கருத்துகளை விரைவாக, மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தி இந்து

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...