உறுப்பினர்கள் இன்று (16) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் கைது செய்யப்பட்ட பெண்ணும் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கல்கிஸை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அரசாங்கப் பணத்தை முறைகேடு செய்தமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், பல மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் டுபாயில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரை கந்தானையில் சுட்டுக் கொன்ற சம்பவத்தை வழிநடத்திய 'கொண்ட ரஞ்சி' எனப்படும் ரஞ்சித் குமாரவின் முக்கிய சீடரான 'சூட்டி மல்லி' என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 'ஊரகத இந்திக்க' எனும் குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியான 'புஞ்சா' எனப்படும் ரவீன் சமிந்த வீரசிங்கவும் இவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இங்கு கைது செய்யப்பட்டுள்ள பெண் இலங்கையில் இடம்பெற்ற பல மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 6 அதிகாரிகள் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை, 'கொண்ட ரஞ்சி' என்பவரும் தமது பாதுகாப்பில் உள்ளதாக டுபாய் அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவித்துள்ளனர். இதற்கமைய, அவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
டுபாயில் கைது செய்த பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
T
The Leader Desk
ஜனவரி 16, 2026 • 4:15 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உறுப்பினர்கள் இன்று (16) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
- கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரை கந்தானையில் சுட்டுக் கொன்ற சம்பவத்தை வழிநடத்திய 'கொண்ட ரஞ்சி' எனப்படும் ரஞ்சித் குமாரவின் முக்கிய சீடரான 'சூட்டி மல்லி' என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- இதன்படி, குறித்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 6 அதிகாரிகள் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

