சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் கோப்பையின் விலையையும் இவ்வாறு குறைக்கத் தீர்மானித்ததாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை இன்று முதல் 125 ரூபாவினால் குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.
அதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க அவர்கள் உடன்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


