இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அஹங்கம பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று, வீட்டிற்குள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரு பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதுடைய பெண்மணி ஆவார்.
சந்தேகநபர் அஹங்கம, தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்செயலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


