யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும்

"தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் என்று அதன் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத்  கோஹோன தெரிவித்தார்.

யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் "தேசிய வெற்றி கொண்டாட்டம்" நாளை (19) நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில், தேசிய வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் நடத்த ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலையிலேயே, இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி தலைமை தாங்குவார் என்று, இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை அறிவித்துள்ளர்து.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

2009 மே மாதம் வரை நீடித்த யுத்தம், நந்திக்கடல் பகுதியில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையில் விடுதலைப் புலிகளால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களை விடுவித்த பெருமையும் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு உண்டு.

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் "தேசிய வெற்றி கொண்டாட்டம்" நாளை (19) நடைபெறவுள்ளது.

இந்த நினைவு நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் இந்த தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வில், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முப்படைகளையும் வழிநடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், தேசபக்தி தேசிய முன்னணி நேற்று ஒரு ஊடக சந்திப்பை நடத்தி, தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி