இந்த வருடம் புதுவருட சடங்குகளை நிறைவேற்றும் நிகழ்ச்சியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களைப் போன்று இந்த முறை ஜனாதிபதியின் புத்தாண்டு கொண்டாட்டங்களை நேரடியாக ஒளிபரப்புவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளின் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரசாங்கத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
எனினும், இம்முறை ஜனாதிபதியின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வழக்கம் பின்பற்றப்படாது.