முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்

ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வங்கியொன்றில் தாம் பராமரித்து வந்த நிலையான வைப்புக் கணக்குகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னர், 2016ஆம் ஆண்டில் மீளப் பெற்று ஊழல் செய்ததாக சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இதன் பொருள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணையுடன் தொடர்புடைய தகவல்களை ரணில் விக்கிரமசிங்க அறிந்திருக்கிறார் என்பதாகும். அதனால், சம்பந்தப்பட்ட சம்பவத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் ரணிலின் தலையீடு இருந்துள்ளது என்று, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கூறுகிறது.

அதன்படி, ரணில் விக்கிரமசிங்க அளித்த உண்மைகளை சரிபார்க்க, தொடர்புடைய ஆவணங்களுடன் ஏப்ரல் 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ஆஜராகுமாறு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web