“அநுராதபுரத்தில், மாஹோ - ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது” என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.