இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர்
தேசபந்து தென்னகோன், நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், இன்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
இந்நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் அங்குள்ள ஒரு பொது வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.