அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணம் சில விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை

எனவும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்னவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, விவசாய பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.

அநுராதபுர மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணமான 2,934,310 ரூபாய் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் அதிகாரி இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சில விவசாயிகளின் உர மானியப் பணம் மாயமாகியது தொடர்பாக இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபற்றி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி