கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்
இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, கிரிவெஹெர சோரத தேரரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மேற்படி விடயம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவும் நேற்று (10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.