2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்
எண்ணிக்கை 500,000ஐ கடந்துள்ளது.
2025ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் ஆக உயர்த்துவதே இலங்கை சுற்றுலாப் பணியகத்தின் நோக்கமாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத் துறை தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி வருகிறது.
2024ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலக்கு எதிர்பார்த்தபடி அடையப்பட்டது.
அந்தத் துறையில் நம்பிக்கையை மேலும் தூண்டும் வகையில், 2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 500,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுள்ளமை விசேட அம்சமாகும்.
2025 ஜனவரி 1 முதல் மார்ச் 5, வரை 530,746 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளான 84,476 பேர், அயல் நாடான இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் இரண்டாவது பெரிய குழு ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், 70,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதில் அடங்கியுள்ளனர்.
மூன்றாவது பெரிய குழுவான 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளனர்.
மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் மார்ச் மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37,768 ஆகும்.