மகா சிவராத்திரி, இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம்

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண்விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். எனினும் இலங்கையின் கிழக்கே உள்ள திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள தென்கயிலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இவ்விழா ஆறு நாட்கள் இரவு கொண்டாடப்படுகின்றது.

சிவராத்திரி இரவிற்கு மறுநாள் இரவு தொடங்கி ஐந்து நாட்கள் இரவு முழுவதும் கோணேஸ்வரர் (கோணநாதர்) அன்னை மாதுமையாளுடன் திருக்கோணமலை நகரை வலம் (நகர்வலம்/ஊர்வலம்)வந்து அருள் புரிவார். இரவு முழுவதும் திருகோணமலை மக்கள் கண் விழித்திருந்து எம்பெருமானை வரவேற்று பூரண கும்பங்களை வைத்து வழிபடுவர்.

இத்தினங்களில் திருகோணமலை நகரம் முழுவதும் வாழை, தோரணம், மாவிலை, நந்திக்கொடி முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வர்ண விளக்குகளால் ஜொலிக்கும். எங்கும் சிவபெருமானின் பக்தி பாடல்கள் ஒலிக்கும். பட்டாசுகள் வானவேடிக்கைகள் நிகழ்த்தி இறைவனை வழிபடுவர். நடன, இசை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறும்.

பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியானது நாளைய தினம் நடக்கவுள்ளது. இந்த நாளில் சிவ பக்தர்கள் விரதம் இருந்து ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்து பிராத்தணை செய்வார்கள்.

ஜோதிடத்தின் படி, சற்று சிறப்பு நாளாக பார்க்கப்படும் இந்த நாளில் பல வருடங்களுக்கு பின் அரிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அதுவும் குறிப்பாக, மகா சிவராத்திரி நாளில் அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருப்பார். அப்போது அந்த மீன ராசியில் ராகுவும் இருப்பார். இதனால் மீன ராசியில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.

அதே போன்று இந்நாளில் கிரகங்களின் தலைவனான சூரியனும், சனி பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக பயணிப்பார்கள்.

இப்படியான நிகழ்வுகள் சுமாராக 152 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். அந்த வகையில், அரிய பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவபெருமானின் செல்லபிள்ளைகளாக இருப்பார்களாம்.

அப்படியானவர்கள் என்னென்ன நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

1. மிருகசீரிஷம் 

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்களின் முயற்சிகள் அனைத்திற்கு சிவ பெருமான துணையாக இருப்பார். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் வேலைகளில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் பணக்கஷ்டங்கள் பெரிதாக வராது. எந்த துறையில் பணி புரிந்தாலும் ஈசனின் அருளால் உச்சத்தில் இருப்பார்கள்.

2. பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானுடன் தொடர் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஞானத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிவபெருமானை போன்று மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அணைவரும் சிவபெருமானின் ஞானம், தன்னலமற்ற தன்மை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகிய பண்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.

3. விசாகம்

சிவபெருமானை போன்று இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஆழ்ந்த மாற்றங்களை விரும்பும் நபராக இருப்பார்கள். புறக்கணித்தல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றின் சக்திகளை உள்ளடக்கியுள்ளனர். அவர்களின் உணர்ச்சி ஆழம், சுயபரிசோதனை மற்றும் மாற்றும் திறன் ஆகியவற்றின் உள்ளார்ந்த குணங்கள் சிவபெருமானின் ஆற்றல்களுடன் ஒத்துப்போகின்றன. அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் சிவபெருமான் அவர்களை ஆசீர்வதிப்பார். எப்போதும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி