Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சலேவுக்கு தினமும் சட்டத்தரணி உதவி வழங்க முடியாது, வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சாத்தியம்: CID அறிவிப்பு!

T

The Leader Desk

ஜூன் 15, 2026 • 5:49 AM

சலேவுக்கு தினமும் சட்டத்தரணி உதவி வழங்க முடியாது, வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சாத்தியம்: CID அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடுப்புக் காவலில் உண்ணாவிரதம் இருந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்ட உதவி மறுப்பு.
  • வாரத்தில் 5 நாட்களும் சட்டத்தரணியைச் சந்திக்க அனுமதி கோரிய சலேயின் மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது சிஐடி.
  • சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலேவுக்குக் (Manori Sallay) எழுத்துப்பூர்வமாக அறிவித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abeysekera) இதனைத் தெரிவித்துள்ளார்.
  • வாரத்தின் 5 நாட்களும் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு மனோரி சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் போதே சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர இதனைத் தௌிவுபடுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:
  • தடுப்புக் காவலில் உண்ணாவிரதம் இருந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்ட உதவி மறுப்பு.

  • வாரத்தில் 5 நாட்களும் சட்டத்தரணியைச் சந்திக்க அனுமதி கோரிய சலேயின் மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது சிஐடி.

  • வைத்தியசாலையில் இருப்பதால் தற்போது சட்ட ஆலோசனை தேவையில்லை எனவும், புதன்கிழமைகளில் மட்டுமே சட்டத்தரணிக்கு அனுமதி எனவும் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர கடிதம் மூலம் அறிவிப்பு.

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் இருந்தபோது, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததன் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தினசரி அடிப்படையில் சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது.

சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலேவுக்குக் (Manori Sallay) எழுத்துப்பூர்வமாக அறிவித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abeysekera) இதனைத் தெரிவித்துள்ளார்.

வாரத்தின் 5 நாட்களும் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு மனோரி சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் போதே சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர இதனைத் தௌிவுபடுத்தியுள்ளார்.

சட்ட ஆலோசனைகள் தேவையில்லை: சிஐடியின் விளக்கம்

தொடர்புடைய கடிதத்தின் ஊடாக சிஐடி பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது;

"சுரேஷ் சலே தற்போது விசாரணைக் கடமைகளில் இருந்து விலகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் எழவில்லை."

மேலும், தொடர்ச்சியாகச் சட்டத்தரணியைச் சந்திப்பதன் மூலம் சந்தேகநபருக்குத் தேவையான மன அமைதி இல்லாது போய், அது அவரது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மட்டுமே சட்டத்தரணி அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் சிஐடி பணிப்பாளர் மனோரி சலேவுக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பத்தினருக்கு தினசரி அனுமதி

இதற்கமைய, சலேயின் சட்டத்தரணியான அசித் சிறிவர்தனவுக்கு ஒவ்வொரு புதன்கிழமை மாத்திரமே சலேயைச் சந்திக்க அனுமதி வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குடும்ப உறுப்பினர்களான அவரது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு தினசரி அடிப்படையில் அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், சட்டத்தரணிக்கு மேலதிகமாகச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க முடியாது என சிஐடி பணிப்பாளர் அக்கடிதத்தில் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...