வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சூரியன் சரியாக தலைக்கு நேராக (உச்சம் கொடுக்க) இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேரம் மற்றும் இடங்கள்: இன்று நண்பகல் சுமார் 12:10 மணியளவில் பின்வரும் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
-
பண்டத்தரிப்பு
-
தெல்லிப்பழை
-
வருத்தலைவிளான்
-
வாசவிளான்
-
மணற்காடு
சூரியனின் தோற்ற வடதிசை நகர்வின் போது, வருடாந்தம் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கை அமைந்துள்ள அட்சரேகைகளுக்கு (Latitudes) நேராக சூரியன் பயணிக்கின்றது.
இந்த காலப்பகுதியிலேயே சூரியன் இலங்கையின் பல்வேறு நகரங்களுக்கு நேராக உச்சம் கொடுக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது.
சூரியன் ஒரு இடத்திற்குச் சரியாக மேலே வரும்போது, அந்த இடத்தில் உள்ள பொருட்களின் நிழல்கள் மிகக் குறைந்த அளவிலேயே தென்படும் அல்லது நிழல்கள் விழாத நிலை (Zero Shadow) ஏற்படும். இது ஒரு வானியல் நிகழ்வாகும்.
இன்றைய தினத்துடன் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் இந்தச் சுற்று நிறைவடைவதாகவும், இதன் காரணமாகப் பகல் வேளையில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


