ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விலை வீழ்ச்சிக்கான காரணம்:
அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹ1றளஇந்த இராஜதந்திர நகர்வு காரணமாகவே எரிபொருள் விலையில் இந்தச் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சந்தை நிலவரம்:
-
பிரெண்ட் (Brent Crude): ஒரு பேரல் மசகு எண்ணெய் விலை 94.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
-
WTI (WTI Crude): இதன் விலை ஒரு பேரல் 90.43 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
-
மர்பன் (Murban Crude): இதன் விலை ஒரு பேரல் 100.80 அமெரிக்க டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கைக்கு இதன் முக்கியத்துவம்:
குறிப்பாக 'மர்பன்' (Murban) ரக மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைவது இலங்கைக்குப் பாரிய நன்மையாகும். இலங்கை அதிகளவில் இந்த ரக மசகு எண்ணெயையே இறக்குமதி செய்து வருகின்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உற்பத்தி செய்யப்படும் இந்த மர்பன் ரக எண்ணெய், சுத்தமானது மற்றும் கந்தகத்தின் (Sulphur) அளவு குறைவாகக் கொண்ட 'இலகு ரக' (Light Crude) எண்ணெய் என்பதால், இதனைச் சுத்திகரிப்பது மிகவும் இலகுவானது என எரிசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


