Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள போதும் இடம்பெறும் கொலைகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்!'

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2026 • 6:40 AM

'அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள போதும் இடம்பெறும் கொலைகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
  • சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் வெறும் ஊடகச் சாகசங்கள் (Media Shows) மாத்திரமே என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகிறது.
  • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் கூட 'சிகாகோ பாணியில்' இடம்பெறும் இவ்வாறான மனிதப் படுகொலைகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் கூட 'சிகாகோ பாணியில்' இடம்பெறும் இவ்வாறான மனிதப் படுகொலைகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்தச் சம்பவமானது நாட்டில் தற்போது நிலவும் பாரிய அனர்த்தகரமான நிலைமை குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன் முன்வைத்த பிரதான கோஷங்களில் ஒன்று 'சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமை' என்பதாகும். அது குறித்துத் தம்மால் பாடம் புகட்ட முடியும் என மேடைகளில் அவர்கள் ஆற்றிய உரைகள் இந்தத் தருணத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, இந்த மிலேச்சத்தனமான கொலையானது நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும், அதனைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு இயலுமை இல்லை என்பதையுமே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் வெறும் ஊடகச் சாகசங்கள் (Media Shows) மாத்திரமே என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகிறது. பாதாள உலகத்தை ஒடுக்குவதாகக் கூறும் அரசாங்கம், இடம்பெறும் ஒவ்வொரு கொலையையும் பாதாள உலகம் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது சுமத்தித் தனது பொறுப்பிலிருந்து தட்டிக்கழிக்க முயல்வதைத் தான் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தக் கொலையானது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும் (Rule of Law) சட்டச் செயற்பாடுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய சவாலாகும் எனத் தெரிவித்துள்ள அவர், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்குச் சட்டம் ஒழுங்கைப் பேணுவதும், நீதியான சமூகமொன்றின் நிலைப்பாட்டிற்காகச் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதும் அரசாங்கம் கைவிட முடியாத பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த மிலேச்சத்தனமான கொலை குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் கூட சீர்குலைந்துள்ள தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தாமதமின்றிப் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படைகளும் அழைக்கப்பட்டுள்ள ஒரு தருணத்தில், இவ்வாறான சம்பவங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெறுவது குறித்து அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள போதும் இடம்பெறும் கொலைகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்!' | Tamil Leader | We Lead the Nation