நேற்று (பெப்ரவரி 14) கொலன்னாவையில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் கொலன்னாவை 'புல்மன்' மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரிந்துள்ள இரண்டு பிரதான அரசியல் முகாம்களையும் மீண்டும் ஒன்றிணைப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஜனநாயக சக்திகள் சிதறி இருப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என எஸ்.எம். மரிக்கார் இதன்போது வலியுறுத்தினார்.
இரு கட்சிகளினதும் பெருமளவிலான செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், மிக முக்கியமான தீர்மானமாக “ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைய வேண்டும்” என்ற யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சந்திப்பின் ஊடாக, கிராம மட்டத்தில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியைக் குறைத்து, எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்ட ஒரு விரிவான கூட்டணியை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட அடித்தளம் இடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



