Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரோ’ பாதுகாப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2026 • 5:27 AM

இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரோ’ பாதுகாப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
  • இதேவேளை, இந்தப் போட்டிக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்காக நானூறு போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • கிராண்பாஸ் மெட்டிபார்க் வாகனத் தரிப்பிடம், செபஸ்தியன் கால்வாய் வாகனத் தரிப்பிடம், கோவில் வீதி, ஆப்பிள்வத்தை, 100 அடி வீதியின் இருமருங்கு மற்றும் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத் தரிப்பிடங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.
  • இந்தப் போட்டியைக் காண்பதற்கு வெளிநாட்டவர்கள் உட்பட பெருமளவிலானோர் வருகை தரவுள்ளமையினால், இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 3 மணி முதல் கொழும்பு ஆர்.
எழுத்து அளவு:

போட்டியின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தப் போட்டிக்காக இந்திய உளவுப்பிரிவான ‘ரோ’ (RAW) மற்றும் இந்திய பாதுகாப்புப் பிரிவினர் மாத்திரமன்றி, வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு வந்தடைந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தானின் பாதுகாப்புப் பிரிவினரும் அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினரும் இந்தப் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கொழும்பு வந்துள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரியதும் அதிக அவதானம் மிக்கதுமான இந்தப் போட்டியைக் கருத்திற்கொண்டு, போட்டி நடைபெறும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள் தலைக்கவசங்கள் (Helmet), மேலங்கிகள் (Jacket), பயணப் பொதிகள் மற்றும் மதுபானங்களை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரோன் கருவிகள், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் எதனையும் மைதானத்திற்குள் கொண்டு செல்வதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மைதானத்திற்குள் உள்நுழையும் போது அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இந்தப் போட்டியின் போது அமைதியின்மையோ அல்லது குழப்பமோ ஏற்பட்டால் சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் போட்டிக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்காக நானூறு போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, அடையாளப்படுத்தப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு மைதானத்திற்கு வருமாறு ரசிகர்களிடம் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிராண்பாஸ் மெட்டிபார்க் வாகனத் தரிப்பிடம், செபஸ்தியன் கால்வாய் வாகனத் தரிப்பிடம், கோவில் வீதி, ஆப்பிள்வத்தை, 100 அடி வீதியின் இருமருங்கு மற்றும் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத் தரிப்பிடங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் போட்டியைப் பார்க்க வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுக்காக பொதுப் போக்குவரத்துச் சேவையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போட்டியைக் காண்பதற்கு வெளிநாட்டவர்கள் உட்பட பெருமளவிலானோர் வருகை தரவுள்ளமையினால், இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 3 மணி முதல் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தின் அனைத்து நுழைவாயில்களும் திறந்து வைக்கப்படும் என்றும், போட்டி ஆரம்பமாவதற்கு நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே மைதானத்திற்கு வருகை தருமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரோ’ பாதுகாப்பு! | Tamil Leader | We Lead the Nation