Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அக்கரைப்பற்றில் 15வது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்கிறது!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2020 • 4:13 PM

அக்கரைப்பற்றில் 15வது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது.
  • தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குறிப்பாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும், சமுர்த்தி பெறுவதற்கு காத்திறுப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் அரசாங்கத்தினால் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
  • இதில் முதற்கட்டமாக 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி விநியோகிக்கப்படுகின்றன.
எழுத்து அளவு:

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளிச் செல்வதும், உள்வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் அன்றாட கூலித் தொழில் செய்யும் பொது மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் எவ்வித வருமானமுமின்றி கஷ்ட நிலமைக்கு ஆளாகியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குறிப்பாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும், சமுர்த்தி பெறுவதற்கு காத்திறுப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் அரசாங்கத்தினால் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி விநியோகிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணத்தை வழங்குமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு கிரமமான முறையில் சுகாதார வைத்தியதிகாரிகள் பிரிவுகள் தோறும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...