பாதுகாப்பற்ற நிலையில் வீட்டில் இருந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாதுகாப்பாக இருந்த குழந்தையின் சகோதரரான பாடசாலை மாணவனை சிறு குற்றம் செய்ததாக கூறி பலவந்தமாக கட்டாயப்படுத்தி பொலிசார் வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை தொடர்பாக ஒருவரைத் தேடும் அக்குரெஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள், அவரது பதினான்கு வயது மகனை அவருக்கு பதிலாக ஜூன் 3 ம் திகதி அன்று அக்குரெஸ்ஸவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு நடந்த அநீதிக்கு ஜூன்  9 செவ்வாய்க்கிழமை தேசிய பொலிஸ் திணைக்களத்திடம் புகார் அளித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிறுவனின் தந்தை ஜெயந்த ரூபசிங்க (இலவங்கப்பட்டை தொழிலதிபர்) 45 நிமிடங்களுக்குள் தான் வீடு திரும்புவதாக பொலிசாருக்கு அறிவித்ததாகவும் அதனை பொலிசார் அலட்சியம் செய்து விட்டு தனது மகனை ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளதகவும் கூறினார்.

பொலிசாரிடமிருந்து அச்சுறுத்தல்:

அவர் வீடு திரும்பி வரும் வழியில் தனது மகனை ஏற்றிச் சென்ற கருப்பு கே.டி.எச் வேனை தடுத்த போது பொலிசார் திருடப்பட்ட இலவங்கப்பட்டையை திருப்பித் தரப்படாவிட்டால் மகன் உட்பட ஏனையே குழந்தைகளையும்  அழைத்துச் செல்வதாக பொலிசார் அச்சுறுத்தியதாக ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

என்னிடம் கேட்டார்கள் நீங்கள் அக்குரெஸ்ஸவிலிருந்து கொண்டு வந்த இலவங்கப்பட்டையை கொடுக்கப் போகிறீர்களா அல்லது தந்தை மகன் உட்பட பிள்ளைகள் அணைவரையும் கூட்டிச் செல்லவா என்று கேட்டனர்.

பொலிசாருடன் வீடு திரும்பிய ஜெயந்த ரூபசிங்க, ஜூன் 1 ம் திகதி பற்றுச் சீ ட்டுடன் வாங்கிய 12 கிலோ இலவங்கப்பட்டை பொலிசாரிடம் ஒப்படைத்து தனது மகனை விடுவித்ததாக கூறினார்.

பொலிசார்  வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், வீட்டின் பாதுகாப்பு கமராவில் உள்ள காட்சிகளை பார்த்த போது மகனை துன்புறுத்தியுள்ளதாக கமராவில் பதிவாகியுள்ள  ஜெயந்த ரூபசிங்க மேலும் கூறினார்.

  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி