தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுத் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இது எந்த வகையிலும் அரசியல் ஓய்வு அல்லது, ஆனால் நாட்டின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கான நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார்.

தைரியமான மாத்தறை மக்களின் பலத்துடன் முப்பது ஆண்டுகளுக்கு  மேலாக தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் மாத்தறை மக்குளுக்கான எனது பணி தொடரும் என்று அவர் கூறினார்.

சமிகி ஜன பலவேகய கட்சியில் மாத்தறை மாவட்ட வேட்பாளராக போட்டி யிடும் மங்கள சமரவீர இன்று (ஜூன் 09) பிற்பகல் மாத்தறையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு மாத்தறை மாவட்டத்தில் உள்ள மாகாண சபை பிரதிநிதிகள் உட்பட ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

விருப்புவாக்கு அழிக்க வேண்டாம்

2020 சமகி ஜன பலவேகய கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டிடும் தனக்கு மாத்தறை மாவட்ட மக்கள் விருப்பு வாக்களிப்பதைத் தவிர்க்குமாறு மங்கள சமரவீர கூறியுள்ளார்.

இது குறித்து ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு தகவல் தெரிவித்ததாக சமரவீர கூறினார்.

கோதபாயவால் வேலை செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளார்!

குறிப்பாக ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் பதவிக்காலம் திறமையற்ற மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமாகும்

ஆறு மாத கால இடைவெளியில், அவர் அதை நன்கு நிரூபித்துள்ளார், நாட்டில் இராணுவ ஆட்சி , இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றை பரப்பியுள்ளார்.

நாடு நெருக்கடிக்குள்ளான நிலையில், எதிர்க்கட்சி தனது பங்கை உணரவில்லை என்று மங்கள சமரவீர கூறினார்.

நாடு மீண்டும் சரியான நிலைக்கு வர வேண்டுமென்றால் ஐ.தே.க யின் அடிப்படைக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற அரசியலில் ஒரு கொள்கைக்காக செயற்பட்டுள்ளதாக கூறிய அவர் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் தங்களின் வாழ்வாதாரம், சகவாழ்வு மற்றும் மனிதகுலத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக தொடர்ந்து பணியாற்ற உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

புதிய அரசியல் பயணம் ஆரம்பம் ...

எவ்வாறாயினும், ஒரு ஜனநாயக, சமூக சகிப்புத்தன்மை கொண்ட கலாச்சாரம், ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஒரு உண்மையான வளர்ச்சி நோக்குநிலை ஆகியவற்றைக் கொண்டுவர ஒரு புதிய அரசியல் அணுகுமுறை தேவை. இந்த புதிய அரசியலுக்காக மக்கள் அனைவரையும் அழைக்கின்றேன் என்று அவர் மேலும் கூறினார்.

நாடளுமன்ற உறுப்பினர் அரசியலை விட்டு வெளியேறியபோதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற ஒருபோதும் முடிவு செய்யவில்லை என்று மங்கள சமரவீர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்த சந்தர்ப்பத்தில்  30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு வாக்களித்த தைரியமான மாத்தறை மக்களின் ஆசீர்வாதம் தொடந்து கிடைக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி