Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

T

The Leader Desk

மே 14, 2026 • 4:12 AM

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
  • தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 18 நீர்த்தேக்கங்களும், 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருகின்றன.
  • இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் திறக்கப்பட்டிருந்த அனைத்து வான் கதவுகளும் இன்று (14) காலை 7.00 மணியளவில் மூடிவிடப்பட்டுள்ளதாக வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் நில்வளா ஆறு, கிங் ஆறு, களு ஆறு மற்றும் அத்தனகலு ஓயா போன்ற நதிகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

குறிப்பாக களுகங்கையின் மில்லகந்தை தவிர்ந்த ஏனைய இடங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மழைவீழ்ச்சி குறைவினால் இந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதால் இது ஒரு தற்காலிக நீர்மட்டக் குறைபாக இருக்கலாம் என்றும் கூறினார்.

தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 18 நீர்த்தேக்கங்களும், 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருகின்றன.

எவ்வாறாயினும், இந்த நீர் வெளியேற்றம் பெரிய அளவிலான வெள்ள அபாயத்தை ஏற்படுத்தாது எனவும், நிலைமைகளை அவதானித்து செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் திறக்கப்பட்டிருந்த அனைத்து வான் கதவுகளும் இன்று (14) காலை 7.00 மணியளவில் மூடிவிடப்பட்டுள்ளதாக வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation