Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு?

T

The Leader Desk

மே 14, 2026 • 3:54 AM

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி அநுரவின் விளக்கம் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும், அதன் அடிப்படையிலேயே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
  • உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மை விலை 720 ரூபாவாக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
  • எனினும், ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் 100 ரூபாய் செலவை ஏற்றுக்கொண்டு, அதனை 392 ரூபாவுக்கு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
  • ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்: முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட பாதிப்பு: "பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக நாம் 98 மில்லியன் டொலர்களைச் செலவிட்டோம்.
எழுத்து அளவு:

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி அநுரவின் விளக்கம்

எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும், அதன் அடிப்படையிலேயே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மை விலை 720 ரூபாவாக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனினும், ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் 100 ரூபாய் செலவை ஏற்றுக்கொண்டு, அதனை 392 ரூபாவுக்கு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்தைச் சந்தித்து வருவதால், இதனை நீண்ட காலத்துக்கு முன்னெடுக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:

முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட பாதிப்பு:

"பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக நாம் 98 மில்லியன் டொலர்களைச் செலவிட்டோம். மார்ச் மாதத்தில் அது 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலராகவும் அதிகரித்தது. மே மாதத்தில் இச்செலவு 522 மில்லியன் டொலராக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 6 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும். நாம் ஒரு சவாலான சூழலிலேயே பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் முறையான நிர்வாகத்தைச் செய்யாததால், எரிபொருள் கூட்டுத்தாபனம் 84 பில்லியன் ரூபா நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. தற்போது அந்த நஷ்டத்தை அரசாங்கமே பொறுப்பேற்றுள்ளதுடன், கூட்டுத்தாபனம் திறைசேரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்:

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மின்சாரக் கட்டணத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், 95 சதவீத நுகர்வோரைப் பாதிக்காத வகையில் அந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 5 சதவீதத்தினரின் மின்சாரக் கட்டணமே அதிகரித்துள்ளது.

இருப்பினும், எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகியவற்றுக்குத் திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது. அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்.

எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. அதிக விலைக்கு எரிபொருளை வாங்கும்போது பழைய நுகர்வு முறையே தொடர்ந்தால், டொலர் வெளியேற்றம் அதிகரிக்கும். எனவேதான், நுகர்வைக் குறைக்கும் நோக்கில் நாம் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க முயற்சிப்போம்"

என ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு? | Tamil Leader | We Lead the Nation