Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஒற்றையாட்சிக்கான அரசமைப்பு வரைபை நிராகரிக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பை நிராகரித்த தமிழரசு!

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2026 • 3:12 AM

ஒற்றையாட்சிக்கான அரசமைப்பு வரைபை நிராகரிக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பை நிராகரித்த தமிழரசு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது.
  • தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்.
  • ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, 2015 - 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி (ஏக்கிய இராஜ்ய) வரைபை நிறைவேற்ற முனைகின்றது.
  • இந்தச் சதியை முறியடிக்கவும், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை முன்வைக்கவும் தமிழ்த் தரப்புகள் ஓரணியில் திரள வேண்டும்.
எழுத்து அளவு:

தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வரும் விடயங்களை வலியுறுத்தியிருந்தார்:

தமிழ் மக்கள் தேர்தல்கள் தோறும் சமஷ்டி தீர்வுக்கே ஆணை வழங்கி வருகின்றனர். ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, 2015 - 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி (ஏக்கிய இராஜ்ய) வரைபை நிறைவேற்ற முனைகின்றது.

இந்தச் சதியை முறியடிக்கவும், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை முன்வைக்கவும் தமிழ்த் தரப்புகள் ஓரணியில் திரள வேண்டும்.

தவிர்த்துக் கொண்ட தமிழரசுக் கட்சி இந்த அழைப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி. கே.சிவஞானம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

'உங்களது கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ள இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் (ஒற்றையாட்சி வரைவு தொடர்பான விமர்சனம்), நாளை (15.02.2026) நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமற்றது. எனினும், ஒற்றையாட்சி முறையை முழுமையாக எதிர்ப்பதிலும், சமஷ்டி முறையை வலியுறுத்துவதிலும் எமது கட்சி என்றும் உறுதியாகவே உள்ளது.'

அரசியல் முக்கியத்துவம் அரசு புதிய அரசமைப்பை நோக்கி நகரும் இக்கட்டான சூழலில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியாக ஒன்றிணைவதில் மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளமையை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...