Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'டிட்வா' சூறாவளியை எதிர்கொள்ளத் தவறியமை குறித்து ஆராய விசேட குழு!

T

The Leader Desk

ஜனவரி 14, 2026 • 12:53 PM

'டிட்வா' சூறாவளியை எதிர்கொள்ளத் தவறியமை குறித்து ஆராய விசேட குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனவரி 20: 2025.12.15 திகதியிடப்பட்ட 2467/03 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட, 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழான 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் செலுத்தும் திட்டம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.
  • ஜனவரி 22: முற்பகல் 9.30 மணி முதல் 10.00 மணி வரை: நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற நடவடிக்கைகள்.
  • முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை: வாய்மூல விடைக்கான வினாக்கள்.
  • முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை: நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
எழுத்து அளவு:

ஜனவரி 20: 2025.12.15 திகதியிடப்பட்ட 2467/03 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட, 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழான 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் செலுத்தும் திட்டம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

ஜனவரி 21: 'டிட்வா' (Ditwa) சூறாவளியை எதிர்கொள்வதற்கான முன்ஆயத்தங்கள் இல்லாமை குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கும் விசேட குழுவொன்றை (Special Committee) நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி 22:

முற்பகல் 9.30 மணி முதல் 10.00 மணி வரை: நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற நடவடிக்கைகள்.

முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை: வாய்மூல விடைக்கான வினாக்கள்.

முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை: நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.

முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை: ஆளுந்தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதம்.

ஜனவரி 23: பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், பிற்பகல் 5.00 மணி முதல் 5.30 மணி வரையான காலப்பகுதி ஒத்திவைப்பு வேளையின் போது கேட்கப்படும் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...