ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால், அதன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிரதிவாதியின் பிணையாளர்களை அடுத்த தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து அவர்களுக்கு நோட்டீஸ் (Notice) அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


