Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலை மக்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஜனவரி 14, 2026 • 5:43 AM

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலை மக்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
  • பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்காக கிராம உத்தியோகத்தர் விபரங்களைச் சேகரித்துச் சென்றார்.
  • ஆயினும், இதுவரை சுமார் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதி கிடைத்துள்ளதாகவும், மிகுதி 26 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எழுத்து அளவு:

ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தளபாடங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு உடைமைகள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்காக கிராம உத்தியோகத்தர் விபரங்களைச் சேகரித்துச் சென்றார். ஆயினும், இதுவரை சுமார் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதி கிடைத்துள்ளதாகவும், மிகுதி 26 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் ஒரே அளவில்தான் பாதிக்கப்பட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கேட்டால், கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலக அதிகாரிகளும் ஒருவரையொருவர் கைகாட்டுகின்றனர். நாங்கள் வங்கிக்கும் பிரதேச செயலகத்திற்கும் அலைந்து திரிய வேண்டியுள்ளது.

அரசாங்கத்தால் எங்களுக்கு நான்கு பிஸ்கட் பெக்கற்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. அதையும் 5 வயதுக்குக் குறைந்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் சாப்பிடக்கூடாது எனக் கூறினர். வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நாங்கள் போராடினோம். ஆனால், கிராம உத்தியோகத்தர் வெள்ளம் புகுந்ததற்கான புகைப்படம் இருக்கிறதா எனக் கேட்கிறார். இது மிகவும் அநீதியானது," எனத் தெரிவித்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், இது குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதன்போது, சிலருக்கான நிவாரணக் காசோலைகள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை நாளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை உரிய தீர்வு கிடைக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து மக்கள் கலைந்து சென்றனர்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், "ரொப்கில் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களில் 20 பேருக்கு மட்டுமே 25,000 ரூபா கிடைத்துள்ளது. விடுபட்டவர்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுக்க நான் நேரடி நடவடிக்கை எடுப்பேன். இல்லாவிடில் மக்களுடன் இணைந்து நானும் போராடுவேன்," என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...