திட்டத்தின் இலக்குகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வரும் காலங்களில் அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் நடைபெறவுள்ளன.
'டிட்வா' புயலால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார இலக்குகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதே இதற்கு காரணமாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டங்களின் போது, எப்போதும் ஒரு நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் தருணத்தில் நிலவும் பொருளாதார நிலைமையே கருத்தில் கொள்ளப்படும்.
புயல் பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, கடன் திட்டத்தின் இலக்குகளும் மாற வேண்டும் என்பதால், இது குறித்து அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் அடுத்த சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளன.
எதிர்பாராத இந்த சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள மேலதிக செலவுத் தேவைகள் காரணமாக, இந்த ஆண்டின் (2026) வரவு செலவுத் திட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.
2025 டிசம்பர் 15ஆம் திகதியளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு நிறைவடையவிருந்த போதிலும், அது தாமதமடைந்துள்ளது.
சூறாவளியால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டை மேற்கொண்டு, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை ஐந்தாவது மீளாய்வைத் தள்ளிவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. அதற்குப் பதிலாக, இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடன் வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.


