உரிமைகள் அலுவலக அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை கட்டமைப்பிற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மோதல்கள் தொடர்பான பாலியல் வன்முறைகள் தற்போதும் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை மௌனமாக சகித்துக்கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மோதல்கள் தொடர்பான பாலியல் வன்முறைகளைக் கையாள்வதற்கு ஒரு சட்டக் கட்டமைப்பு இருப்பது கட்டாயமானது என குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது ஒரு அத்தியாவசிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மோதல்கள் தொடர்பான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எல்லாவற்றையும் இழந்தோம் - நீதிக்கான நம்பிக்கையை கூட" எனும் தலைப்பின் கீழ் இந்த வெளிப்படுத்தல் செய்யப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தினால் ஒரு தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உள்நாட்டு பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கும், உருமாற்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக இப்பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல், அங்கீகாரம் மற்றும் இழப்பீடு இல்லாமை ஆகியவை, இன்றும் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் ஒரு மரபினை உருவாக்கியுள்ளதாக அந்த ஆவணம் கண்டறிந்துள்ளது.


