1200 x 80 DMirror

 
 

(பாறுக் ஷிஹான்)

8 வயது சிறுமியை பாலியல்
துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 60 வயதானவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
 
26.09.2024 அன்று வீடுகளுக்கு  குர்ஆன் ஓதுவிக்க செல்லும்  நபரினால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
 
குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
 
இது தொடர்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர்.
 
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு  சந்தேக நபரைக் கைது செய்திரந்தனர்.
 
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை(30) முன்னிலைப்படுத்தியபோது சந்தேக நபரான 60 வயது   நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி