எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்

, தமிழராகிய நாம் தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்,தமிழர் மீது திடீர் பாசம் கொண்ட சிங்கள வேடதாரிகள் எமது தேசம் எங்கும் இன்முகத்துடன் வலம் வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

இதில் தமிழராகிய நாம் எந்த சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியாது. தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியினை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டாம் விருப்பு வாக்கு என்ற விடயத்தை தமிழர்கள் முற்றாக புறந்தள்ள வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எவ்வித வாக்குறுதிகளையோ அல்லது கரிசனைகளையோ வெளிப்படுத்தாத சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்க துடிக்கும் எந்த தமிழர் தரப்பையும், குறிப்பாக போலி தமிழ் தேசியத்தை நுனிநாக்கில் பேசிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்கு சேவகம் செய்யும் அனைவரையும் தமிழ் மக்கள் எமது அரசியல் வெளியிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும் – என்றுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி