பாராளுமன்ற உறுப்பினர் பதவியை
இராஜினாமா செய்த சட்டத்தரணி தலதா அத்துகோரள இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று (05) மத்துகமவில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிகளோ சலுகைகளோ வேண்டாம், நாட்டை இன்னொரு கோட்டாபயவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்க்ஷ எமக்கு உறுதிப்படுத்திய பயங்கரமான அனுபவத்தை நாம் வேறு பெயரில் மீண்டும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த அவல அனுபவத்தை இந்த நாட்டு மக்களால் மீண்டும் தாங்க முடியுமா? சஜித் பிரேமதாசவுடன் தனக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லையென்றாலும், தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவரது அரசியல் பார்வை மற்றும் அவரது வியூகத்தை மிகவும் ஆழமாக ஆராய்ந்தபோது பயங்கரமான உண்மையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.