காரணமாக மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதையிட்டு மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக அவரது மைத்துனரான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா நேற்று (12) நீதிமன்றில் தெரிவித்தார்.
மறைந்த கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையின் போது சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணையில் கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் மூத்த சகோதரி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க முதலில் சாட்சியமளித்தார்.
அவரது சாட்சியம் வருமாறு:
"எனது சகோதரியும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்தனர். எனது தங்கை கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து தனது இரு பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கபில அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருபவர் அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 4 முறை மட்டுமே எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். எனக்கு நினைவிருக்கும் வகையில், 2026 மே 06 புதன்கிழமை அன்று கபில பிணையில் விடுதலையாகி நேரடியாக எங்கள் வீட்டிற்கு வந்தார். எனக்கு 'ஹலோ அனுஷ்கா' என்று சொன்னார். அவர் சாப்பிட்டாரா என்று கேட்டபோது இல்லை என்று சொன்னதால், நான் அவருக்கு உணவு வழங்கினேன். இரண்டு தர்பூசணி சாறு (Watermelon juice), ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த பிறகு ஒரு பொதி சோறு (Lump rice) சாப்பிடக் கொடுத்தேன். பின்னர் ஒரு பால் காபியும் தயாரித்துக் கொடுத்தேன். அதன் பிறகு அவர் தனது வீட்டிற்குச் சென்றார்.
மறுநாள் மாலை 4 மணியளவில் மீண்டும் தனது காரில் எமது வீட்டிற்கு வந்தார். தனது காரின் சாவியை என்னிடம் கொடுத்து, சாரதியைக் கொண்டு அதனைத் தனது வீட்டில் விடுமாறு கூறினார். அரவிந்த அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. பின்னர் அவரும் வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு அரவிந்தவும் நானும் பிணையில் வந்திருந்த சிலருடன் சேர்ந்து வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்றோம். நாங்கள் செல்லும் போது கபில எமது வீட்டின் முதல் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். இரவு 10 மணியளவில் நாங்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, கபில மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். கபில அன்று இரவு உணவு உட்கொள்ளவில்லை.
இரவு 11 மணியளவில் நான் எனது மகனுடன் தூங்கச் செல்லத் தயாரான போது, கபில தங்குவதற்கு ஒரு அறையைத் தயார் செய்து கொடுக்குமாறு அரவிந்த என்னிடம் கூறினார். நான் வீட்டில் வேலை செய்பவரிடம் கூறி, முதல் மாடியில் உள்ள எனது மூத்த மகனின் அறையைத் தயார் செய்து கொடுத்தேன். அடுத்த நாள் காலை 7 மணியளவில், வழக்கறிஞர் வந்திருப்பதாகவும், அவருக்குத் தேநீர் தயாரித்துக் கொடுக்குமாறும் எனது கணவர் கூறினார். கணவர் கபிலவிற்கு அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் கதவைத் தட்டியும் எந்தப் பதிலும் இல்லை. இதையடுத்து பிரியந்த என்ற வழக்கறிஞருடன் நான் மேலே சென்று கதவைத் திறக்க முயன்றேன். கதவு திறக்கப்படாததால் வீட்டில் வேறொரு இடத்தில் இருந்த 'மாஸ்டர் கீ' (Master Key) கொண்டு கதவைத் திறந்தேன்.
நான் பூட்டைத் திறந்தாலும் முதலில் வழக்கறிஞரே உள்ளே சென்றார். நான் கதவுக்குள் ஒரு அடிதான் வைத்தேன். கட்டிலில் யாரும் இருக்கவில்லை. அறையில் இருந்த நாற்காலி குளியலறைப் பக்கமாகத் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. உடனே நாம் வெளியே செல்வோம் என வழக்கறிஞர் கூறினார்".
"பிணை கிடைத்த அன்று கபில எனக்குத் தொலைபேசியில் அழைத்து, 'வழக்கறிஞருடன் பேசி பிணைப் பணத்தைத் தயார் செய்யுங்கள்' எனக் கூறினார். அத்துடன் 'ஒரு பிணையாளர் இருக்கிறார், இன்னும் இருவர் தேவை' என்றும் கூறினார். எப்படியோ 'முன்னிலைப்படுத்தப்பட்ட இரு பிணையாளர்களிடம் கிராமசேவகர் சான்றிதழ் இல்லை' எனத் தெரிந்ததும், எனக்கு நெருக்கமான மற்றும் கபிலவை நன்கு தெரிந்த வேறு இரு பிணையாளர்களை முன்நிறுத்தி அடுத்த நாள் பிணை எடுத்தேன்.
07 ஆம் திகதி காலை கபில எனக்கு அழைப்பு விடுத்து, 'மிக்க நன்றி, யாரும் இல்லாத நேரத்தில் நீங்கள் மாத்திரமே இருந்தீர்கள்' எனக் கூறினார். பின்னர் எனக்கு இரண்டு மூன்று பேர் செய்தி (Message) அனுப்பி, கபிலவிற்கு மீண்டும் ஒரு பிரச்சினை என்று கூறினார்கள். நான் மீண்டும் கபிலவிற்கு அழைத்த போது, 'மீண்டும் ஒரு நீதிமன்ற வழக்கு' என்று அவர் கூறினார். நான் அவரிடம் 'எங்கள் வீட்டிற்கு வாருங்கள், வந்து வழக்கறிஞர் திரு. ரியென்சியுடன் பேசி என்ன செய்யலாம் என்று பார்ப்போம்' எனக் கூறினேன். பின்னர் மாலை நாம் வழக்கறிஞருடன் பேசிய போது, முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் 'கபிலவை வீட்டில் வைத்துவிட்டு வந்து சந்தியுங்கள்' என்று அவர் கூறினார். நாம் கபிலவை எமது வீட்டில் விட்டுவிட்டு வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்றோம். அந்த நேரத்தில் கபிலவைக் கைது செய்ய பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
திரு. ரியென்சி கூறுகையில்,
'அடுத்த நாள் கபிலவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். பிரியந்த என்ற வழக்கறிஞரை காலையில் வீட்டிற்கு அனுப்புகிறேன்' என்று கூறி அவரது இலக்கத்தைத் தந்தார். நான் வீட்டிற்கு வந்து வழக்கறிஞர் பிரியந்தவிற்கு அழைத்தேன். அவர் 'காலையில் கபிலவை அழைத்துச் செல்ல வருவேன், எனவே அவரை வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறி உங்கள் வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள்' என்றார். அதன் பிறகு கபில எனது முன்னிலையிலேயே தனது வீட்டில் வேலை செய்பவருக்கு அழைத்தார். 'சில மருந்துகளையும் ஆடைகளையும் எடுத்து வர வேண்டும்' என்று கூறினார். அத்துடன் 'ஒரு ஜிம் மெட் (Gym Mat) இருக்கிறது, அதையும் அனுப்புங்கள்' என்றார். 'மச்சான் இந்த நேரத்தில் எங்கே ஜிம் போகப் போகிறாய்?' என்று நான் கேட்டேன். அவர் 'இல்லை, ஆடைகளைத் தொங்கவிட வேண்டும்' என்றார்.
நான் எனது சாரதியிடம் கபிலவின் வீட்டிற்குச் சென்று அந்தப் பொருட்களை எடுத்து வருமாறு கூறினேன். எனது சாரதி அந்தப் பொருட்களைக் கொண்டு வந்து மேசை மீது வைத்தார். பின்னர் நாம் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது கபில 'நான் வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகிறது, அதற்குள் மீண்டும் என்னை உள்ளே (சிறைக்கு) தள்ளப் பார்க்கிறார்கள்' எனக் கூறினார். மீண்டும் சிறைக்குச் செல்வதில் அவருக்குப் பெரும் விருப்பமின்மை இருந்ததை என்னால் உணர முடிந்தது. நான் 'கவலைப்பட வேண்டாம், நாம் இதனைச் சரிசெய்து கொள்வோம்' எனக் கூறினேன். பின்னர் நான் மேலே சென்று அவருக்கு அறையைக் காட்டினேன். ஏசியையும் (AC) போட்டுவிட்டு 'இப்போது நிம்மதியாகத் தூங்குங்கள், நாம் நாளை இதனை எதிர்கொள்வோம்' எனக் கூறினேன்.
இவை அனைத்தும் முடிவடையும் போது நள்ளிரவு 12.30 மணி இருக்கும். காலை 7 மணியளவில் வழக்கறிஞர் வீட்டிற்கு வந்து அழைத்த போது நான் விழித்தேன். கபிலவிற்கு இருமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன், பக்கத்து அறையினூடாகச் சென்று குளியலறைப் பக்கத்தாலும் தட்டினேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. பின்னர் நான் கீழே வந்து வழக்கறிஞரிடம் 'கபில தயாராகிக் கொண்டிருப்பார்' எனக் கூறினேன். எனது மனைவியிடம் 'கபிலவை எழுப்பி சீக்கிரம் வழக்கறிஞருடன் அனுப்பி வை' என்று கூறினேன். பின்னர் கபிலவிடமிருந்து பதில் இல்லாததால் மனைவியும் வழக்கறிஞரும் மாஸ்டர் கீ (Master Key) மூலம் கதவைத் திறந்து பார்த்த போதே இதனைக் கண்டுள்ளனர்".
இந்த மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையின் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.


