Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக ரூ. 2 கோடியே 10 இலட்சம் நிதி விடுவிப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2026 • 6:11 AM

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக ரூ. 2 கோடியே 10 இலட்சம் நிதி விடுவிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
  • எனினும், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாததால், மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிக்கான திகதிகள் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை.
  • இவ்வாறான நிலையிலேயே, இந்தப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.

மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

எனினும், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாததால், மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிக்கான திகதிகள் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே, இந்தப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அகழ்வுத் திகதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...