நிலைநாட்டவும் எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (13) இந்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்:
"பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் எதிர்பார்ப்பது போல, இந்தத் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது வௌிக்கொணரப்பட வேண்டும். அதற்காக எல்லாம் வல்ல இறைவனின் நீதியை வேண்டி, அன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனை அமர்வுகள் முன்னெடுக்கப்படும்."
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், அதன் பின்னணியிலுள்ள உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


