நிகழ்வாக பரிணமித்துள்ளது.
இந்நிலையில், 'ஸ்பார்க்வின் ரிசேர்ச்' (Sparkwinn Research) நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, உறவுகளில் இருப்பவர்களில் அல்லது திருமணமானவர்களில் சுமார் 63 சதவீதமானோர் (கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர்) இம்முறை காதலர் தினத்திற்காக செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இளைய தலைமுறையினரின் ஆர்வம்
காதலர் தினத்தைக் கொண்டாடுவதில் 'ஜெனரேஷன் இசட்' (Gen Z - 18 முதல் 29 வயதுடையோர்) தலைமுறையினரே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்களில் 72 சதவீதமானோர் இதற்காக தாராளமாக செலவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக, 'ஜெனரேஷன் ஒய்' (Gen Y - 30 முதல் 45 வயதுடையோர்) தலைமுறையினரில் 54 சதவீதமானோர் மட்டுமே இதற்காக செலவு செய்யவுள்ளனர்.
பரிசுப் பொருட்களில் பாலின வேறுபாடு
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான செலவு செய்யும் போக்கிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆண்களில் 68 சதவீதமானோர் தமது துணைகளுக்காகப் பரிசுகளை வாங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், பெண்களில் 57 சதவீதமானோர் மாத்திரமே அவ்வாறு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விருப்பமான பரிசுகள்
இலங்கையர்கள் காதலர் தினத்திற்காக அதிகம் வாங்கும் பொருட்களாகப் பின்வருவன அடையாளம் காணப்பட்டுள்ளன:
சாக்லேட்கள் மற்றும் கேக் வகைகள் (47%)
ஆடைகள் மற்றும் பாதணிகள் (47%)
மலர்கள் (42%)
இளம் வயதினர் சாக்லேட் மற்றும் பேஷன் சார்ந்த பொருட்களை விரும்பும் அதேவேளை, வயதில் மூத்தவர்கள் (Gen Y) வெளியே சென்று உணவருந்துதல் மற்றும் சுற்றுலா போன்ற 'அனுபவம் சார்ந்த' (Experience-led) கொண்டாட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
கடைசி நேரக் கொள்வனவு (Last-minute shopping)
இலங்கையர்களில் பெரும்பாலானோர் முன்கூட்டியே திட்டமிட்டுப் பரிசுகளை வாங்குவதில்லை என்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
44 சதவீதமானோர் காதலர் தினத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே பரிசுகளை வாங்குகின்றனர்.
29 சதவீதமானோர் காதலர் தினத்தன்று அன்றைய தினமே பரிசுகளை வாங்குகின்றனர்.
12 சதவீதமானோர் மட்டுமே ஓரிரு வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டுப் பொருட்களை வாங்குகின்றனர்.
நேரடி விற்பனைக்கே மவுசு
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியிலும், இலங்கையர்களில் 65 சதவீதமானோர் கடைகளுக்கு நேரில் சென்றே (Offline) பொருட்களை வாங்க விரும்புகின்றனர்.
24 சதவீதமானோர் இணையத்தளம் மற்றும் நேரடி விற்பனை ஆகிய இரண்டையும் பயன்படுத்துகின்றனர். வெறும் 11 சதவீதமானோர் மட்டுமே முழுமையாக இணையத்தளம் (Online) ஊடாகப் பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர்.


