முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (13) முற்பகல் 6.00 மணி முதல் நாளை (14) முற்பகல் 6.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய:
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை (கவனமாக இருக்கவும் - Level 2) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்: பாதஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை (விழிப்புடன் இருக்கவும் - Level 1) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


