Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்படாது!'

T

The Leader Desk

ஜனவரி 13, 2026 • 6:06 AM

'அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்படாது!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நகர்த்தவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ பயன்படுத்தப் போவதில்லை என, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • "தேவைப்பட்டால் இந்த அனர்த்தத்தைக் காரணம் காட்டி பல விடயங்களிலிருந்து நாங்கள் தப்பித்துக்கொண்டிருக்க முடியும்.
  • மேலும், சுமார் 110,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, வீடுகளுக்கு சேதம் ஏற்படாத போதிலும் அபாயகரமான நிலைமை காரணமாக வெளியேற அறிவுறுத்தப்பட்ட சுமார் 10,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நகர்த்தவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ பயன்படுத்தப் போவதில்லை என, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'REBUILDING SRI LANKA' தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நாடு படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் தருணத்தில், இந்த சூறாவளியை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும், இதன் ஊடாக அரசாங்கம் எவ்விதத்திலும் தட்டிக்கழிப்பதற்கு முயற்சிக்கவில்லை என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

"நாங்கள் தயாரித்துள்ள வேலைத்திட்டத்தை மாற்றியமைக்காமல், இந்த அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தே நாங்கள் போராடுகிறோம்" என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

"தேவைப்பட்டால் இந்த அனர்த்தத்தைக் காரணம் காட்டி பல விடயங்களிலிருந்து நாங்கள் தப்பித்துக்கொண்டிருக்க முடியும். வரலாற்றில் நாம் அவ்வாறுதான் பயணித்தோம். 30 வருடங்களாக அனைத்து அழிவுகளையும் யுத்தத்தின் மீது சுமத்தினோம். அவ்வாறான நிலைமையே எமக்கு இருந்தது. சில தொற்றுநோய் நிலைமைகளை இந்த அனர்த்தங்களின் போர்வையாக மாற்றிக்கொண்டோம். ஆனால் எமது வேலைத்திட்டத்தை பின்னோக்கி கொண்டு செல்லவோ அல்லது முடக்கவோ இதனை பயன்படுத்தக்கூடாது என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்."

இதேவேளை, 'டிட்வா' சூறாவளி காரணமாக 24 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 6,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், சுமார் 110,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, வீடுகளுக்கு சேதம் ஏற்படாத போதிலும் அபாயகரமான நிலைமை காரணமாக வெளியேற அறிவுறுத்தப்பட்ட சுமார் 10,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...