பொலிஸ் ஊடகப்  பதில்

பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர நேற்று (31) கடமைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவரது கார் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உத்தியோகபூர்வ வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ருவன் குணசேகர வாதுவவிலுள்ள தனது வீட்டிலிருந்து கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​காலி வீதியில் நல்லுருவ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.
 
விபத்தின் பின்னர் ருவான் குணசேகர மற்றுமொரு பொலிஸ் ஜீப்பில் கடமைக்குச் சென்றுள்ளார்.
 
லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கு காரணம் என தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்து பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளனர்.
 
பின்வத்த நிலைய தலைமைப் பரிசோதகர் பத்மா நந்தனவின் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்துப் பிரிவு நிலைய அதிகாரி சார்ஜென்ட் பிரியந்த (13980), கான்ஸ்டபிள் மதுஷன் (104235) ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி