ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க,  ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumiக்குமிடையில் இன்று (22)  அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
 
IMG 20240722 WA0169
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
 
இதன்போது ஜப்பான் வெளிவிகார அமைச்சர் அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
 
இந்த சந்திப்பில் தென்கிழக்கு மற்றும்  தென்மேற்கு  ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro  மற்றும் அந்தப் பிரிவின் பிரதி பணிப்பாளர் IWASE Kiichiro ஆகியோரையும் அநுரகுமார சந்தித்து கலந்துரையாடினார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி