1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் முன்மொழிவை, கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக வழிமொழிந்தனர்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக உறுதிப்படுத்தினர்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரை இப்பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

"ஒன்றாக வெல்வோம்  - நாம் கம்பஹா " என்ற தொனிப்பொருளில் இன்று (21) கடவத்தை பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கிச் செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில், கம்பஹா மாவட்டத்தின் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்த மக்கள், ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்தார்.

அப்போது, மேடையில் இருந்த பொதுஜன பெரமுனவின்  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும், கூட்டத்தில் பங்கேற்ற 15,000இற்கும் மேற்பட்டோர் கைகளை உயர்த்தி ஏகமனதாக அந்த மொன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பொருளாதாரம் மற்றும் அரசாங்கம் இல்லாத நாட்டைத்தான் பொறுப்பேற்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் தனக்காக அன்றி, நாட்டுக்காகவே செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.

ekwajaya 2024.07.21

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி