கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு வழங்குமாறு கோரி இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் மற்றும் அரச கணக்காளர் சேவை சங்கம் என்பன பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
இந்தக் கடிதங்களின் பிரதிகள் ஜனாதிபதி செயலாளர், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
சூறாவளி காரணமாக நாட்டில் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பலர் தமது உயிர்களையும் வாழ்நாளில் ஈட்டிய சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை முறையாகத் தெரிவு செய்து, அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்படாத வகையில் இழப்பீடுகளை வழங்குவதற்கு தமக்கு பொறுப்பு உள்ளதாக பிரதேச செயலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


