இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 23 தேரர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி:
தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 தேரர்கள், கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 112 கிலோகிராம் எடையுள்ள "குஷ்" மற்றும் "ஹாஷ்" போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசாரணைத் தகவல்கள்:
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, 'அமிதானந்த' என்ற தேரர் ஒருவரே இந்த சட்டவிரோதக் கடத்தல் நடவடிக்கையை முன்னின்று வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பிரதான சந்தேகநபரான அமிதானந்த தேரர், கம்பஹா பகுதியில் உள்ள ஒரு விகாரையில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன்படி, இந்த வழக்கில் தற்போது மொத்தம் 23 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


