தனிமையில் வசிப்பதாக (Single-person households) சனத்தொகை மற்றும் வீடமைப்புத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் 370,229 பேர் தனிமையில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் (71.3%) பெண்கள் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சனத்தொகை மற்றும் சமூக மாற்றங்கள்:
-
மொத்த சனத்தொகை: நாட்டின் தற்போதைய சனத்தொகை 21,781,800 ஆகும். சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீற்றருக்கு 350 ஆகப் பதிவாகியுள்ளது.
-
முதுமையடையும் சமூகம்: நாட்டின் மொத்த சனத்தொகையில் 18 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். 'முதுமையடைதல் சுட்டெண்ணின்' (Aging Index) படி, ஒவ்வொரு 100 சிறுவர்களுக்கும் (0-14 வயது) ஈடாக 87 முதியவர்கள் காணப்படுகின்றனர்.
-
சிறுவர் சனத்தொகை வீழ்ச்சி: சிறுவர்களின் சதவீதம் 20.7 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அத்துடன் மக்களின் சராசரி வயது (Median age) 35 ஆக உயர்ந்துள்ளது. இது 2012 உடன் ஒப்பிடுகையில் 5 வருட அதிகரிப்பாகும்.
திருமண நிலை மற்றும் பாலின விகிதம்:
-
பெண்கள் ஆதிக்கம்: ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாலின விகிதம் 93.3 ஆகப் பதிவாகியுள்ளது. (ஒவ்வொரு 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள்).
-
திருமணம் செய்யாதோர் அதிகரிப்பு: சனத்தொகையில் 41.8 வீதமானோர் ஒருபோதும் திருமணம் செய்யாதவர்கள். 2012 இல் இது 30 வீதமாகவே காணப்பட்டது.
-
திருமண வயது உயர்வு: முதன்முறை திருமணத்தின் போது ஆண்களின் சராசரி வயது 29.2 ஆகவும், பெண்களின் சராசரி வயது 25.6 ஆகவும் உயர்ந்துள்ளது.
-
விதவைகள்: 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 44.2 வீதமானோர் விதவைகள் ஆவர். ஆண்களில் இது 10.5 வீதமாக மட்டுமே உள்ளது.
சுகாதார மற்றும் பொருளாதார நிலை:
-
தொற்றா நோய்கள்: இலங்கையர்களில் 19.2 வீதமானோர் (4.18 மில்லியன் பேர்) உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஏதாவதொரு தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் நீண்டகால நோய் நிலைமைகளைக் கொண்டுள்ளனர்.
-
வேலையின்மை: நாட்டில் வேலையின்மை விகிதம் 6 வீதமாகும். 20-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மத்தியிலேயே வேலையின்மை அதிகமாகக் காணப்படுகிறது.
இனம் மற்றும் சமயம்:
-
இனம்: சிங்களவர்கள் - 16,144,037 (74.12%), இலங்கைத் தமிழர்கள் - 2,681,627, இலங்கைச் சோனகர் (முஸ்லிம்கள்) - 2,283,246.
-
சமயம்: பௌத்தர்கள் - 69.8%, இந்துக்கள் - 12.6%, இஸ்லாமியர்கள் - 10.7%.
தொழினுட்பம் மற்றும் இடப்பெயர்வு:
-
டிஜிட்டல் அறிவு: 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 15 வீதமானோர் டிஜிட்டல் அறிவைக் கொண்டுள்ளனர். 15-19 வயதுக்கு இடைப்பட்டோரே டிஜிட்டல் அறிவில் முன்னிலையில் உள்ளனர்.
-
தொடர்பாடல்: 93.8 வீதமான வீடுகளில் மொபைல் போன் பயன்பாடு காணப்படுகிறது.
-
இடப்பெயர்வு: 13 வீதமான மக்கள் தங்களது பிறந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து வசிப்பவர்களாக (Lifetime Migrants) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகப்படியானோர் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களையே தமது வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.


