பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக இது குறித்துத் தெரிவிக்கையில், குழுக்கூட்டத்தில் இந்தச் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
"அரசாங்க நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வது தொடர்பான சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' (Rich country - Beautiful life) கொள்கைப் பிரகடனத்தில் நாம் முன்வைத்த முக்கிய விடயங்களில் ஒன்று, சில வருடங்கள் மாத்திரம் நாடாளுமன்றத்தில் இருந்துவிட்டு உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் இந்த ஓய்வூதிய முறையை ரத்து செய்வதாகும்.
தற்போது நடைமுறையிலுள்ள 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டம், இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக ரத்து செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் கிடைக்காது. அதன் பின்னர் அரசியல் என்பது ஒரு சேவையாக மாத்திரமே முன்னெடுக்கப்படும்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தின் ரீதியிலும், நாம் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளின் ரீதியிலும் இது ஒரு மிக முக்கியமான தீர்மானம் என்று நாம் கருதுகிறோம்.
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக, நாம் எந்தப் பாதையில் பயணிக்கிறோம் மற்றும் எதிர்காலத்தில் இந்த மாற்றத்தை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வோம் என்பது குறித்த உறுதிப்பாட்டை மக்களுக்கு வழங்க முடியும் என நாம் நம்புகிறோம்."


