Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சட்டத்தை மீறி 12,000 கோடி கடன் பெற்ற அரசு!

T

The Leader Desk

மே 7, 2020 • 6:10 PM

சட்டத்தை மீறி 12,000 கோடி கடன் பெற்ற அரசு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மாத்திரம் 12 ஆயிரம் கோடிகளை அரசு கடனாகப்பெற்றுள்ளதாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைநகரை மையமாகக் கொண்டு செயற்படும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.
  • கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கு அமைய, ஜனவரி-ஏப்ரல் காலத்திற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாய் மாத்திரமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வெரைட் ரிசர்ச்சின் அறிக்கைக்கு அமைய, இலங்கை அரசு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 841 பில்லியன் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
  • கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உட்பட நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே, தீர்க்க முடியுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்திருந்தது.
எழுத்து அளவு:

இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மாத்திரம் 12 ஆயிரம் கோடிகளை அரசு கடனாகப்பெற்றுள்ளதாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைநகரை மையமாகக் கொண்டு செயற்படும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கு அமைய, ஜனவரி-ஏப்ரல் காலத்திற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாய் மாத்திரமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெரைட் ரிசர்ச்சின் அறிக்கைக்கு அமைய, இலங்கை அரசு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 841 பில்லியன் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கடன் வரம்பை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மாத்திரமே காணப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

"நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இந்த விடயம் மிக முக்கியமானது” என வெரைட் ரிசர்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், பொருளாதார நிபுணருமான, நிஷாந்த டி மெல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உட்பட நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே, தீர்க்க முடியுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்திருந்தது.

திரைசேறி பட்டியல்கள், பத்திரங்கள் மற்றும் பிணைப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் கடந்த நான்கு மாதங்களில் அரசாங்கம் அதிக கடனைப் பெற்றுள்ளது. அதன் பெறுமதி 742.5 பில்லியன் ரூபாய்களாகும்.

மீதமுள்ள வெளிநாட்டுக் கடன் சீனாவால் வழங்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுமதி 96.4 பில்லியன் ரூபாய்களாகும்.

கடனில் இருந்து தப்பிக்க அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கோரிக்கை விடுத்து மறுதினமே, வெரைட் ரிசர்ச் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...