சந்தேகத்துக்கிடமான வகையில்

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படும்  பியுமி ஹன்ஸ்மாலியின் 8 முன்னணி வங்கிகளில் காணப்படும் 19 கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற இரகசியப் பொலிஸாருக்கு மாளிகாகந்த நீதிவான் மஞ்சுள திலகரத்ன அனுமதி வழங்கினார்.

இரகசியப் பொலிஸின் சட்ட விரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
 
'எனது நாட்டுக்காக' அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்தவின் முறைப்பாட்டின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
 
கொழும்பு ஹில்டன் குடியிருப்பில் வசிக்கும் பியுமி ஹன்ஸ்மாலி 800,000 ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் காரை கொள்வனவு செய்தமை, கொழும்பில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் 148 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டை கொள்வனவு செய்தமை, 8 பெரிய வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வங்கிக் கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை குறுகிய காலத்தில் வைப்புச் செய்தமை  தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
 
2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு, இரகசியப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான், வங்கிக் கணக்குப் பதிவேடுகளை சமர்பிக்க பொலிஸாருக்கு அனுமதியளித்து, அவர்களிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி