கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா சென்று

கொண்டிருந்த டிகிரிமனிக்கே கடுகதி ரயில் தலவாக்கலை மற்றும் வட்டகொட நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டதால் கொழும்பு - கோட்டை பதுளை ரயில் சேவைகள் இன்று (16) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை - ஹட்டன் மற்றும் பதுளை -நானுஓயா வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்் அவர் கூறினார்.

நேற்று (15) இரவு 9.50 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரை சென்ற டிக்கிரிமனிக்கே ரயில் வடகொடை பாலத்தின் வைத்து தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் நானுஓயா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி